அந்த மனசுதான் சார்.. மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீதுக்காக இங்கிலாந்து அணி செஞ்ச விஷயம்.. ஹார்ட்டின்களை அள்ளும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் வீரர்கள் மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீத்தின் மத நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் விதமாக நடந்துகொண்ட இங்கிலாந்து அணியின் சக வீரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்துள்ளது. முன்னதாக குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது. இதில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்கியது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் மசூத்- 38 (28) ரன்கள் எடுத்தார். பாபர் 32 (28) ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரஷித் & ஜோர்டான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்
இரண்டாவது பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்க வீரர் ஹேல்ஸ் 1 ரனனில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பட்லர் 26 (17) ரன்கள் எடுத்து ஆசுவாசம் அளித்தார். மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் துணையுடன் போராடிய பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பையை வென்றது.
உலகக்கோப்பையை பெற்ற பிறகு இங்கிலாந்து அணியினர் ஆராவாரம் செய்தனர். பின்னர் வழக்கமாக நடைபெறும் ஷாம்பைன் கொண்டாட்டத்திற்கு அணிவீரர்கள் தயாராகினர். அப்போது, அணியினருக்கு நடுவே மொயின் அலி மற்றும் ஆதில் ரஷீத் நின்றுகொண்டிருந்தனர். இதனால் அமைதிகாத்த இங்கிலாந்து அணி வீரர்கள், அவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்ற பின்னர் ஷாம்பைன் பாட்டிலை குலுக்கி வெற்றியை கொண்டாடினர்.
மொயின் அலி மற்றும், ஆதில் ரஷீத்தின் மத நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் விதமாக நடந்துகொண்ட இங்கிலாந்து வீரர்களின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Respect for religious diversity is an essential element of any peaceful society.
Here England captain Jos Buttler asked Adil Rashid and Moeen Ali to leave before they celebrated with champagne. Respect.#ENGvsPAK #T20WorldCup22 #T20WorldCupFinal pic.twitter.com/Tu9pvqKZba
— Mohd Shahnawaz Hussain (@Mohd_S_Hussain) November 13, 2022
Also Read | குளுகுளு வெண்பனிபோல.. சீஸனின் முதல் பனிப்பொழிவு.. குளிர்ந்துபோன மக்கள்.. வைரல் வீடியோ.!
மற்ற செய்திகள்