இனி ‘VIVO’ ஐபிஎல் கிடையாது.. டைட்டில் ஸ்பான்சரை தட்டித் தூக்கிய ‘மிகப்பெரிய’ நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சரை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை டாடா குழுமம் (Tata Group) கைப்பற்றியுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார். சீன நிறுவனமான விவோ (Vivo) வசமிருந்த டைட்டில் ஸ்பான்சர் டாடா குழுமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனம் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை 2200 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனிடையே இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் விவோவுக்கு பதிலாக dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
இதனை அடுத்து கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ செயல்பட்டது. இந்த நிலையில் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வேறு நிறுவனத்திற்கு விவோ வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டாடா குழுமத்துக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் கை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இனி ‘டாடா ஐபிஎல்’ என விளம்பரம் வெளியாகும் என தெரிகிறது.
மற்ற செய்திகள்