"எல்லா ரெக்கார்டும் இனி நம்ம பேருல தான்".. 50 ஓவர் போட்டியில் 200+ ரன்கள்.. தமிழக வீரர் ஜெகதீசனின் அசாத்திய சாதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரரான ஜெகதீசன் பல்வேறு சாதனைகளை லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் படைத்துள்ள நிலையில், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
Also Read | "எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!!
விஜய் ஹசாரே தொடர் தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, மும்பை, கேரளா உள்ளிட்ட பல அணிகள் விளையாடி வருகிறது.
மேலும், தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் தலைமை தாங்கி வருகிறார். குரூப் சி யில் தமிழ்நாடு அணி இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.
விஜய் ஹசாரே தொடரில் பல இளம் வீரர்கள் நிறைய சாதனைகளை புதிது புதிதாக படைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வீரரான ஜெகதீசன், பல அசாத்திய சாதனைகளை படைத்து பட்டையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. லிஸ்ட் ஏ போட்டியில் ஒரு அணி 500 ரன்களுக்கு மேல் எடுத்தது இது தான் முதல் முறை. இதற்கு முன்பு, நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
அதே போல தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் 154 ரன்களும், ஜெகதீசன் 277 ரன்களும் எடுத்தனர். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு 400 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடியும் இது தான். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துள்ள ஜெகதீசன், தொடர்ச்சியாக லிஸ்ட் ஏ போட்டியில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, ஆல்வீரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும் அவர் அடித்த 277 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவாகி உள்ளது.
இது தவிர இன்னும் பல சாதனைகளையும் ஜெகதீசன் இந்த இரட்டை சதம் மற்றும் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்ததன் மூலம் படைத்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு அணியின் இமாலய இலக்கை நோக்கி ஆடிய அருணாச்சல பிரதேஷ் அணி, 71 ரன்கள் அவுட்டானதால் 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.
Also Read | 2023 பட்ஜெட் : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனை
மற்ற செய்திகள்