சிஎஸ்கே அட்மினுக்கே தெரியுது.. அந்த பையனை எடுக்காம விட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. தமிழ்நாடு வெதர்மேன் அதிருப்தி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரரை ஏலத்தில் எடுக்காமல் விட்டது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கருத்து தெரிவித்துள்ளார்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய பிராவோ, அம்பட்டி ராயுடு, தீபக் சஹர் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட்டின் பெயர் ஏலத்தில் வந்தது. உடனே சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. ஆனால் 7.75 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்து விட்டது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணையில் ஏற்கனவே விளையாடிய தமிழக வீரரான ஜெகதீசனின் பெயர் ஏலத்தில் வந்தது. அடிப்படையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ‘டுவிட்டரை ஹேண்டில் பண்ற அட்மினுக்கே தெரியுது. ஜெகதீசனை 20 லட்சத்துக்கு எடுக்காம விட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்’ என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்