ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்! யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடிய,  19 வயது தமிழர் பேட்டிங், பவுலிங் என அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்! யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லீக், அரையிறுதி சுற்றுகள் நடந்து முடிந்து, இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கவுள்ள இந்த இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதனிடையே, 3 மற்றும் 4ஆவது இடத்தை தீர்மானிக்கும் போட்டி தற்போது நடந்து முடிந்தது. இதில் அரையிறுயில் தோற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பத்து விக்கெட் இழப்பிற்கு 201 எடுத்து ஆஸி., அணிக்கு 202 ரண் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை  நிர்ணயித்தது.  பரபரப்பாக நடந்த இந்தப்போட்டியில் ஆஸி அணி போராடி 49.1 ஓவர்கள் முடிவில் 202/8 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிவேதா ராதாகிருஷ்ணனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தமிழகததை சேர்ந்த வீரர் நிவேதா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

Tamil Nadu player who added pride to the Australian team

யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?

2002ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நிவேதன் ராதாகிருஷ்ணன்.  சிறுவயதில் தனது தந்தையிடம் இருந்து கிரிக்கெட்டின் பாலபாடங்களை கற்கத் தொடங்கியிருக்கிறார். இவரது தந்தை அன்புசெல்வன், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.  நிவேதன் ராதாகிருஷ்ணன் உள்நாட்டு தொடர்களில் தமிழக அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரிலும் தனது திறமைகளை நிரூபிக்க முயற்சித்துள்ளார்.  2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் நெட் பவுலராகவும் நிவேதன் செயல்பட்டிருக்கிறார்.

அசாத்திய திறமை

ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியுரிமை பெற்ற அவர், அங்கு நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார். நிவேதனுக்கு இருக்கும்  திறமையை கண்டு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை சேர்த்துக்கொண்டது.  சுழற்பந்துவீச்சாளர் நிவேதனால் வலது, இடது என இரண்டு கைகளிலும் பவுலிங் வீச முடியும். அதுவும் இரண்டு கைகளிலும் ஒரே மாதிரியான செயல்பாட்டை வைத்திருப்பது தான் ஆச்சர்யம்.

Tamil Nadu player who added pride to the Australian team

இரண்டு கைகளில் பந்துவீச்சு 

முன்னதாக பேட்டி ஒன்றில்  பேசிய நிவேதன் ராதாகிருஷ்ணன், நான் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன். ஆனால் ஒருவர் கூட இரண்டு கைகளிலும் பந்துவீசும் திறமை வைத்திருந்ததில்லை. அதனை நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என நினைத்தேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை, வீழ்ந்தாலும், நான் முடிந்தவரை போராடிக்கொண்டே தான் இருப்பேன்" என்று கூறினார்.

U-19 WORLD CUP CRICKET, AUSTRALIA, AFGHANISTAN, TAMILNADU PLAYER, NIVETHAN RADHAKRISHNAN

மற்ற செய்திகள்