'களத்தில் இறங்கியதுமே சம்பவம் செய்த’... ‘யார்க்கர் புயல் சேலம் நடராஜன்’... ‘மிரண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்’... ‘துள்ளிக் குதித்த ரசிகர்கள்’... !!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதன்முதலாக களம் இறங்கியதுமே முதல் விக்கெட்டை வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் தடம் பதித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் 66, 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
இந்நிலையில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், அணியில் சைனி, ஷமி, மயங்க், சாஹல் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக நடராஜன், குல்தீப், ஷர்துல் தாகூர், சுப்மன் கில் களம் இறக்கப்பட்டனர். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 302 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்னஸை, 5-வது ஓவரில், சர்வதேச போட்டியில் முதன்முதலாக களமிறங்கிய சேலத்தைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை பதிவுசெய்தார்.
கடந்த 2 போட்டிகளிலும் களம் இறக்கப்படுவார் என்ற எதிர்பார்த்து பொய்த்துபோன நிலையில், களம் இறங்கிய முதல் போட்டியிலேயே பவர் பிளேயில் 4 ஓவருக்கு 21 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தி வருகிறார். இதனால் ரசிகர்கள் தங்களது சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.
#Nattu First Wicket in International Cricket For Thangarasu Natarajan ❤️
Chinnappampatti Express Kicks Off 🔥#AUSvIND #AUSIND #3rdODI #Nattu #Natarajan pic.twitter.com/0S9TrWgYGN
— Vinuth Nayaka (@VinuthNayaka7) December 2, 2020
மற்ற செய்திகள்