'இவரயா முதல்ல நெட் பவுலரா எடுத்தீங்க'?.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'!.. மிரண்டு போன ஜாம்பவான்கள்!.. நடராஜனின் மேஜிக் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் அறிமுகமாகி நன்றாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் இன்றும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

'இவரயா முதல்ல நெட் பவுலரா எடுத்தீங்க'?.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'!.. மிரண்டு போன ஜாம்பவான்கள்!.. நடராஜனின் மேஜிக் என்ன?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால், இந்திய அணி தொடரை வென்றது.

இந்திய அணியின் முக்கியமான பவுலர்கள் எல்லோரும் இன்று அதிக ரன் கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் நன்றாக பவுலிங் செய்து 2 விக்கெட் எடுத்தார். ஆனால் தொடக்கத்தில் இவர் அதிக ரன்களை கொடுத்தார். 

இன்று பவுலிங் செய்த எல்லா வீரர்களும் 30+ ரன்களை கொடுத்தனர். அதில் நடராஜன் மட்டுமே குறைவாக 33 ரன்களை கொடுத்தார். வாஷிங்க்டன் சுந்தர் 2 விக்கெட் எடுத்து 34 ரன்கள் கொடுத்தார். நடராஜன் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்தார். 

கணக்குப்படி தொடக்கத்தில் கோலி சரியாக ரீவ்யு கேட்டு இருந்தால் இன்று நடராஜன் மேத்யூ வேட் விக்கெட்டையும் வீழ்த்தி இருப்பார். ஆனால் கோலி செய்த தவறு காரணமாக இன்று நடராஜனால் அந்த விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 

இன்று போட்டி நடந்த மைதானம் பவுலிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் கூட இன்று சரியாக பந்து வீச முடியாமல் திணறினார்கள். ஆனால், நடராஜன் அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. மற்ற பவுலர்கள் சொதப்பிய போதும் கூட இன்று நடராஜன் களத்தில் தொடர்ந்து உறுதியாக பவுலிங் செய்து வந்தார். 

இவரின் பவுலிங்கை பார்த்து ஹர்ஷா போக்லே போன்ற கிரிக்கெட் வல்லுநர்கள், ஆஸ்திரேலியாவின் மெக்ராத் போன்ற முன்னாள் வீரர்கள் மிரண்டு போய் உள்ளனர். நடராஜன் எப்படி இப்படி பந்து வீசுகிறார். இக்கட்டான நேரத்தில் கூட பந்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். 

உண்மையில் அவர் களத்தில் மேஜிக் போலத்தான் ஆடுகிறார். வரிசையாக ஒரே வீரர் மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடுவது எல்லாம் அபூர்வம். நடராஜன் அதை மிக எளிதாக செய்கிறார், என்று பாராட்டி உள்ளனர். இவரின் பவுலிங் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது என்றும் கூறியுள்ளனர். 

இன்றைய போட்டியில் நடராஜன் இரண்டு விக்கெட் எடுத்திருக்க வேண்டியது. ஆனால், கடைசியில் மிஸ்ஸாகிவிட்டது. இரண்டு பவுண்டரிகள், சில மிஸ் பீல்ட்டுகளை தவிர இன்று நடராஜன் பவுலிங் எப்போதும் போல சிறப்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்