'பவர்ப்ளே'ல எடுத்த விக்கெட்... நடராஜனுக்காக டீம்-ஐ மாற்றிய கோலி!.. 'அந்த' இடம் இனிமே 'நட்டு'வுக்கு தான்!'.. 'டாப் வீரர்' கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரில் தமிழக வீரர் நடராஜன் அணியில் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளார்.

'பவர்ப்ளே'ல எடுத்த விக்கெட்... நடராஜனுக்காக டீம்-ஐ மாற்றிய கோலி!.. 'அந்த' இடம் இனிமே 'நட்டு'வுக்கு தான்!'.. 'டாப் வீரர்' கொடுத்த சர்ப்ரைஸ்!

இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் இடையே அணியில் இடம் பிடிக்க போட்டி நிலவி வரும் நிலையில், நடராஜன் நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

கேப்டன் விராட் கோலி முக்கிய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளித்து விட்டு, நடராஜனை பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.  

இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட நடராஜன், ஒருநாள் அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட வைத்து ஆச்சரியம் அளித்தார் கேப்டன் விராட் கோலி. அந்தப் போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார் நடராஜன். 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டு ஓவர்களில் மட்டும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதைத் தவிர அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நிறைய யார்க்கர் பந்துகளையும் வீசி இருந்தார். 

இந்த நிலையில், அடுத்து நடைபெற உள்ள டி20 தொடரில் அவருக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. கேப்டன் கோலி நடராஜனை நிச்சயம் ஆட வைப்பார் என இந்திய அணி வட்டாரம் கூறி வருகிறது. 

ஒருநாள் தொடரில் பும்ரா முழுமையாக மூன்று போட்டிகளிலும் ஆடினார். எனவே, அவருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படும். அப்படி நடந்தால் நடராஜனுக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும். யார்க்கர் பந்து வீசுவதில் பும்ராவுக்கு பின் இந்திய அணிக்கு கிடைத்த முக்கிய பந்துவீச்சாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதை அடுத்து தற்போது ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் மீது கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இந்திய அணியில் எப்போதும் பும்ரா, ஷமிக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்து வந்த நிலையில் அந்த இடத்தை பிடிக்க பல இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் முயன்று வருகின்றனர். அதில் தாமதமாக இணைந்துள்ள நடராஜன் முன்னணியில் இருக்கிறார். 

டி20 தொடரில் ஷமி சில போட்டிகளில் ஆடக் கூடும். நவ்தீப் சைனிக்கு ஓய்வு அளிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. தீபக் சாஹர், நடராஜன் அனைத்து போட்டிகளிலும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார்.

 

மற்ற செய்திகள்