"இந்த விஷயத்துல 'கோலி' தோத்துட்டாரு... ஸ்டோக்ஸ் தான் 'வின்னர்'..." கடுப்பேத்திய 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்த நிலையில், அதன் பிறகு ஆடிய இந்திய அணியில், ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 365 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 160 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 135 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய கேப்டன் கோலி ஆகியோரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக, போட்டி நடுவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்த போது, ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் கோலி டக் அவுட்டானார். இது பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ரேம் ஸ்வான், கோலியை ஸ்டோக்ஸ் அவுட் ஆக்கியதன் மூலம், அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நடந்த மோதலில் ஸ்டோக்ஸ் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
'விராட் கோலி வந்த வேகத்தில் ரன் எடுக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், இந்த முறை அவரின் கணக்கு பொய் ஆகி விட்டது. வாழ்த்துக்கள் ஸ்டோக்ஸ். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். இதனால், கோலி மற்றும் ஸ்டோக்ஸ் இடையே நடந்த மோதலில் ஸ்டோக்ஸ் வெற்றி பெற்று விட்டார்' என கோலியை விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, இந்த மோதல் குறித்து பேசிய ஸ்வான், கோலியின் செயல் சிறுபிள்ளைத்தனமாக இருந்ததாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்