Video : "நீ ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு".. சூறாவளி மாதிரி சுழன்ற 'SKY'.. "எங்க பந்து போட்டாலும் வெளிய தான்"..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று தற்போது முடிவடைந்துள்ளது.
இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
குரூப் 1 ல் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற, இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்து அணி அடுத்ததாக தகுதி பெற்றிருந்தது. மேலும் குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரை இறுதி போட்டி, நவம்பர் 09 ஆம் தேதியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த ஷாட் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது.
அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பிறகு, தங்களின் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. கே எல் ராகுல் 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.
இந்த போட்டியில், இந்திய அணி சிறப்பான ரன்களை குவிக்க காரணமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்த சூர்யகுமார், 61 ரன்களை எடுத்திருந்தார். அதே போல, அவர் அடித்த ஷாட்கள் பலவும் மிக மிக கடினமான வகையில் தான் அமைந்திருந்தது. 360 வகையில் அனைத்து ஏரியாவிலும் பறந்து பறந்து சூர்யகுமார் அடிக்க, கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் இந்த விஷயம் மிரளவும் வைத்திருந்தது.
முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே வீரர் Richard Ngrava வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்திருந்தார் சூர்யகுமார். இதில், ஆப் சைடில் மிகவும் வைடாக ரிச்சர்ட் வீசிய பந்தை நீங்கி போய் முழங்கால் மடக்கி, ஸ்கொயர் லெக் திசையில் ஸ்கூப் ஷாட்டாக அடித்தார் சூர்யகுமார். நம்ப முடியாத வகையில் சூர்யகுமார் அடித்த இந்த ஷாட், இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
மற்ற செய்திகள்