பல வருசமா பட்ட 'கஷ்டம்'.. 'இந்திய' அணியில் கிடைத்த 'சான்ஸ்'... " 'மேட்ச்' முடிஞ்சதுக்கு அப்றமா போட்ட 'ட்வீட்'..." நெகிழ்ந்து போன 'சூர்யகுமார்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மோதி வருகிறது. இதன் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பல வருசமா பட்ட 'கஷ்டம்'.. 'இந்திய' அணியில் கிடைத்த 'சான்ஸ்'... " 'மேட்ச்' முடிஞ்சதுக்கு அப்றமா போட்ட 'ட்வீட்'..." நெகிழ்ந்து போன 'சூர்யகுமார்'!!

முன்னதாக, இந்த டி 20 தொடரில் ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். முதல் டி 20 போட்டியில் இரண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், நேற்றைய போட்டியில், இரண்டு பேரும் அறிமுகமாகினர். இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. இந்திய அணியில் அதிகட்சமாக கோலி 73 ரன்களும், அறிமுக வீரர் இஷான் கிஷான் 56 ரன்களும் எடுத்தனர். அறிமுக போட்டியிலேயே, அதிரடியாக ஆடி, அரை சதமடித்து அசத்திய இஷான் கிஷானுக்கு பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், முதல் சர்வதேச போட்டியில் சக வீரர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'இது என் அம்மா, அப்பா, சகோதரி, என் மனைவி, என் பயிற்சியாளர் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும். நாங்கள் ஒன்றாக கனவு கண்டோம். ஒன்றாக காத்திருந்தோம். நாங்கள் ஒன்றாக நிறைவேற்றிக் காட்டினோம்' என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

30 வயதாகும் சூர்யகுமார் யாதவ், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடிய போதும், அவருக்கு இந்திய அணியில் ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய போதும், ஆஸ்திரேலிய தொடரில் அவர் பெயர் இடம் பெறாமல் போனது, அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

ஆனால், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்று, நேற்றைய போட்டியில் களமிறங்கிய நிலையில், சூர்யகுமாரின் பல ஆண்டு போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்