Naane Varuven M Logo Top

சஞ்சு சாம்சன் பெயரை கத்திய ரசிகர்கள்.. உடனடியா பேருந்தில் இருந்த சூர்யகுமார் செஞ்ச விஷயம்.. கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸை அள்ளிய வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மோத உள்ளது.

சஞ்சு சாம்சன் பெயரை கத்திய ரசிகர்கள்.. உடனடியா பேருந்தில் இருந்த சூர்யகுமார் செஞ்ச விஷயம்.. கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸை அள்ளிய வீடியோ!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது.

இதில், முதலாவதாக டி 20 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதன் முதல் போட்டி இன்று (28.09.2022) நடைபெறுகிறது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் வைத்து இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களும் சமீபத்தில் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அந்த சமயத்தில், பேருந்துக்குள் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் செய்த விஷயம், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Suryakumar yadav shows sanju samson photo to fans

கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரிலும், இன்று ஆரம்பமாக உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம் பெறவில்லை. அது மட்டுமில்லாமல், அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த விஷயம், அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது தொடர்பாக கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். அப்படி இருக்கும் வேளையில், இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்த போது பேருந்தில் இருந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும், சஞ்சு சாம்சன் பெயரையும் அவர்கள் ஆர்பரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவ், தனது போனில் சஞ்சு சாம்சன் போட்டோவை ரசிகர்களை நோக்கி காட்டி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் உற்சாகமடைந்ததுடன் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருந்தனர்.

Suryakumar yadav shows sanju samson photo to fans

சக கிரிக்கெட் வீரரின் போட்டோவை போனில் காட்டும் சூர்யகுமார் தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

SURYAKUMAR YADAV, SANJU SAMSON, IND VS SA

மற்ற செய்திகள்