சூரிய குமார் யாதவிற்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. மொத்த ரெக்கார்டையும் காலி பண்ணிட்டாரு மனுஷன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவை 2022 ஆம் ஆண்டின் சிறந்த T20 வீரராக அறிவித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC).
Images are subject to © copyright to their respective owners.
இந்தியாவின் 360 பேட்டர் என சூரிய குமார் யாதவ் அழைக்கப்படுகிறார். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. களத்தில் இறங்கிய பிறகு சூரிய குமாரின் ஷாட்களை கணிப்பது உலகின் மிகச்சிறந்த பவுலர்களுக்கே மிகவும் சிரமான விஷயம் தான். திசை பாகுபாடு இன்றி அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர்களை விளாசி பவுலர்களை நிலைகுலைய செய்துவிடும் சூரிய குமார் யாதவ் T20 போட்டிகளில் இந்தியாவின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைத்திருக்கிறார்.
Image Credit : ICC
2022 காலண்டர் ஆண்டில், சூர்ய குமார் 31 டி20 இன்னிங்ஸ்களில் 187.43 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 46.56 சராசரியுடன் இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்களுடன் 1164 ரன்கள் எடுத்தார். செப்டம்பர் - அக்டோபரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் மூன்று அரை சதங்களை இவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, அவர் 43 T20I இன்னிங்ஸ்களில் இருந்து 1578 ரன்கள் எடுத்துள்ளார். மார்ச் 2021 இல் T20 போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் எடுத்திருக்கும் சூரியகுமார் 180.34 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 46.41 சராசரியை வைத்திருக்கிறார். சூர்யகுமார் 2022 ஆம் ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்டர் ஆனார். மேலும் இந்த வடிவத்தில் அதிக ரன்களை எடுத்தவராக அந்த ஆண்டை முடித்தார். அதே நேரத்தில் நவம்பர் தொடக்கத்தில் முகமது ரிஸ்வானைக் கடந்து உலகின் நம்பர் 1 டி20 பேட்டராகவும் ஆனார்.
Image Credit : ICC
2022 ஆம் ஆண்டில், சூர்யகுமார் டி20 போட்டிகளில் 68 சிக்ஸர்களை அடித்தார். ஒருவருடத்தில் வேறு எந்த வீரரும் இத்தனை சிக்ஸர்களை விளாசியது இல்லை. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை T20 தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் 239 ரன்களை சூரியகுமார் எடுத்திருந்தார். இதன்மூலம் அந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இதில் 3 அரைசதங்களை அவர் விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு சூரிய குமார் யாதவ் செய்த சாதனைகளை கருத்தில்கொண்டு சிறந்த T20 வீரராக அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.
மற்ற செய்திகள்