ஒரே ஓவரில் அடுத்தடுத்து ‘அதிர்ச்சி’.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. கொதிக்கும் ரசிகர்கள்..! என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சூர்யகுமார் யாதவின் தலையில் பலமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஓவரில் அடுத்தடுத்து ‘அதிர்ச்சி’.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. கொதிக்கும் ரசிகர்கள்..! என்ன நடந்தது..?

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை மும்பை அணி குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து  கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 19-வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். 152 கிமீ வேகத்தில் வந்த பந்து ஹர்திக் பாண்ட்யாவின் தலையை நோக்கி வேகமாக வந்தது. இதனால் பாண்ட்யா உடனே தலையை கீழே குணிந்து கொண்டார். இதில் நூலிழையில் அவரது தலையில் படாமல் பந்து சென்றது.

இதனை அடுத்த பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ்வின் தலையில் பலமாக அடித்தது. இதனால் நிலைகுழைந்த அவர் வலி தாங்க முடியாமல் ஹெல்மெட்டை கழற்றி தலையில் கை வைத்துக்கொண்டார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனை அடுத்த பந்தே சூர்யகுமார் யாதவ் சிக்ஸ் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தலையில் பந்து பலமாக அடித்ததால் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்ய வரவில்லை.

இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் ஒரே ஓவரில் அடுத்து இரண்டு வீரர்களில் தலையை நோக்கி பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ப்ளிப் ஹியூஸின் தலையில் பந்து பலமாக பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்