'ஏன் சூரியகுமார் யாதவுக்கு மட்டும் இப்படி நடக்கிறது'?.. உடைந்தது ரகசியம்!.. கொதிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 156 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி குறித்தும், ராகுலின் மோசமான ஆட்டம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஏனெனில், இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியில் தனது அறிமுக வாய்ப்புப் பெற்ற சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யவில்லை. ஒருவேளை அவர் பேட்டிங் செய்திருந்தால் அவரது பேட்டிங் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஆனால், ஒரே போட்டியில் அறிமுகமான அவர் பேட்டிங் செய்யாமலேயே அடுத்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் ரோகித் அணிக்குள் இணைந்ததால் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியிருந்தது என கோலி அறிவித்தார்.
இந்த நிலையில் தான், தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வரும் ராகுல் ஏன் அணியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு ரன் மட்டுமே ராகுல் அடித்துள்ளார். அவரை ஏன் அணியில் வைத்திருக்க வேண்டும் ? அவருக்கு பதிலாக இஷான் கிஷனை ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடவிட்டு, சூர்யகுமார் யாதவை மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சூரியகுமார் யாதவிற்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ராகுலின் இடம் குறித்து பேசிய கோலி, "ஒரு சில ஆட்டங்கள் வைத்து அவரை மோசமான வீரர் என்று கூறிவிட முடியாது. ராகுல் உண்மையிலேயே ஒரு கிளாஷ் பிளேயர் அவர் இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார்" என்று கோலி உறுதியாக கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்