'பல வருஷ போராட்டம் வீண் போகல...' 'டிவிட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்...' - பதிலுக்கு காத்திருந்த இன்னொரு சர்ப்ரைஸ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 

'பல வருஷ போராட்டம் வீண் போகல...' 'டிவிட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்...' - பதிலுக்கு காத்திருந்த இன்னொரு சர்ப்ரைஸ்...!

முதல் போட்டியில் இந்திய அணி மோசமாகவே தோற்றது. இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன. முதல் போட்டியில் தொடக்க வீரர்கள் சரியாக ஆடதாத காரணத்தால் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த விதத்தில் ரெண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமானதாகவும், மகிழ்சிகரமான செய்தியாகவும் இந்திய அணியில் வீரர்கள் சேர்ப்பு நடந்துள்ளது. 

Suryakumar Yadav and Ishant Kishan will play for India

பல ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் முதல்தர போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் தற்போது அதற்கான விடை கிடைத்து, இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாட உள்ளனர். 

Suryakumar Yadav and Ishant Kishan will play for India

முதல் போட்டியிலே விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாவது போட்டியில் இருவரும் விளையாடுவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றே சொல்லலாம். இதனால் இன்றைய ஆட்டம் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

டாஸ் வென்றப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, “நாங்கள் பந்துவீச முடிவு செய்துள்ளோம். மைதானம் ஈரப்பத்துடன் இருப்பதாக தெரிகிறது. இதனால், முதல் பந்துவீசி எங்களால் இங்கிலாந்து அணியைக் கடுப்படுத்த முடியும். இப்போட்டியில் ஷிகர் தவனுக்கு ஓய்வுகொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அக்சர் படேல் இப்போட்டியில் விளையாட மாட்டர்.

 

சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

இப்போட்டியில் இந்திய அணி சார்பாக புதுமுகங்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் களமிறங்கவுள்ளனர். நீண்ட காலமாக சூர்யகுமாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்