Video : "முதல் 'மேட்ச்' முதல் 'பந்துல'... இத விட பெஸ்ட் ஷாட் காட்டுறவங்களுக்கு 'Lifetime' செட்டில்மென்ட் டா..." சூர்யகுமார் அடித்த 'அடி'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான நான்காவது டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இரண்டாவது போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவிற்கு, அந்த போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்னரே இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மூன்றாவது போட்டியில், சூர்யகுமார் யாதவை இந்திய அணி களமிறக்காதது, பல முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கம்பீர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள், கோலியை விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில், இளம் வீரர் இஷான் கிஷான் காயமடைந்துள்ளதால், இன்று நடைபெறும் நான்காவது போட்டியில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். சர்வதேச அரங்கில், முதல் முறையாக பேட்டிங் செய்த சூர்யகுமார், 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதிலும் குறிப்பாக, சர்வதேச போட்டியில் தனது முதல் பந்தை அவர் அடித்த விதம் தான், தற்போது ரசிகர்களிடையே பேசுப் பொருளாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை, 360 டிகிரிக்கு வளைந்து, அதனை சிக்ஸராக மாற்றினார் சூர்யகுமார் யாதவ். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவை தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Suryakumar Yadav first ball six in Jofra Archer. That's one way to start! 🔥#INDvENG pic.twitter.com/osKyc0qNUm
— UrMiL07™ (@urmilpatel30) March 18, 2021
பல ஆண்டுகள், ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி, சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ், தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பையே, இத்தனை சிறப்பாக பயன்படுத்தி, தனது திறமையையும் நிரூபித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்