"மருந்து, Injection ஏதாச்சும் போட்டு என்ன விளையாட வைங்க".. மேட்ச் முன்னாடி சூர்யகுமாருக்கு நடந்த விஷயம்.. அவரே சொன்ன அதிரடி விஷயம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் நேற்று முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது.
Also Read | கோப்பையை கையில் வாங்கியதும்.. நேராக வந்த ரோஹித் செய்த காரியம்.. கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ!!
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி கண்டிருந்தது.
இதனால், மூன்றாவது போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது.
இதனிடையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், மூன்றாவது டி 20 போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.
சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ரன்களும், கோலி 48 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். விறுவிறுப்பான கடைசி ஒருவரில், ஒரு பந்தை மீதம் வைத்து இந்திய அணி வென்றதுடன் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார். இந்நிலையில், மூன்றாவது டி 20 போட்டிக்கு முன்பாக நடந்த நிகழ்வு தொடர்பாக சூர்யகுமார் பகிர்ந்துள்ள செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தொடரை கைப்பற்றிய பின்னர், ஆட்டநாயகன் சூர்யகுமார் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்ற அக்சர் பட்டேல் ஆகியோர் கலந்துரையாடும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்போது சூர்யகுமாரிடம், பிசியோ அறையில் உங்களைப் பற்றி ஏன் பேசினார்கள் என்றும் அதிகாலை 3 மணிக்கு ஏன் எழுந்தீர்கள் என்றும் கேள்வி ஒன்றை அக்சர் படேல் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சூர்யகுமார், "போட்டிக்கு முன்பாக எனக்கு வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அதே வேளையில், தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் போட்டி என்பதால், நான் எனது மருத்துவர் மற்றும் பிசியோவிடம், 'இதுவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தால் நான் எப்படி நடந்து கொள்வேன்?. என்னால் இது போல் இருக்க முடியாது. அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எனக்கு மருந்து அல்லது ஊசியை போடுங்கள். போட்டியில் விளையாடுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்' என்று கூறினேன்" என சூர்யகுமார் கூறி உள்ளார். அதே போல, இந்திய ஜெர்சியில் மைதானத்துக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் ஏதோ வித்தியாசமான உணர்ச்சி தனக்கு உருவாவதாகவும் சூர்யகுமார் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி டி 20 போட்டியில், அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த சூர்யகுமார், உடல் நிலையை பொருட்படுத்தாமல், விளையாடியே தீர வேண்டும் என முடிவு எடுத்த விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Also Read | "அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"
மற்ற செய்திகள்