'செம்ம நக்கல்யா இவருக்கு!'.. இந்திய அணியை விமர்சித்த ரணதுங்காவை... சைக்கிள் கேப்பில் சம்பவம் செய்த சூர்யகுமார் யாதவ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியை விமர்சிக்கும் வகையில் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்த கருத்துக்கு சூர்யகுமார் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

'செம்ம நக்கல்யா இவருக்கு!'.. இந்திய அணியை விமர்சித்த ரணதுங்காவை... சைக்கிள் கேப்பில் சம்பவம் செய்த சூர்யகுமார் யாதவ்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சென்றுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது.

இந்த தொடர் நடைபெறக்கூடாது என்பதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.

அதாவது, "இந்தியாவின் இராண்டாம் தர அணியுடன் இலங்கை அணி மோதுவதா? இது இலங்கை கிரிக்கெட்டிற்கே அவமானம்", இந்த தொடருக்கு ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வாரியத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். 

ரணதுங்காவின் இந்த கருத்து குறித்து பதிலளித்திருந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், 20 பேர் கொண்ட இந்திய அணியில் 14 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் தான், 6 பேர் மட்டுமே அறிமுக வீரர்கள். எனவே, இந்த தொடர் குறித்தும், இலங்கை வாரியம் குறித்தும் யாரும் குறை சொல்ல தேவையில்லை என்பது போல தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து, இந்திய அணி வீரர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். அதில் அவர், "ரணதுங்காவின் கருத்தை நாங்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. அதை குறித்து பேசக்கூட இல்லை. அனைவரும் தற்போது தீவிர பயிற்சியில் கவனம் செலுத்துகிறோம். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. பயிற்சி ஆட்டம் சிறப்பாக அமைந்தது. 

இலங்கைக்கு நாங்கள் ஜாலியாக இருக்க வந்துள்ளோம் எனக்கூறலாம். ஜாலியாக விளையாடிவிட்டு இங்கிருந்து நிறைய நல்ல நம்பிக்கையை எடுத்துச்செல்வோம். நாங்கள் இரண்டாம் தர அணி என்ற கருத்து குறித்து பெரிதாக சிந்தித்து பார்ப்பதில்லை" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தின் மூலம் இலங்கை அணியை சுலபமாக வீழ்த்திவிடுவோம் என மறைமுகமாக சூர்யகுமார் யாதவ் விமர்சித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்