ஓ இதுனால தான் அவரு 360 டிகிரி பிளேயரா.. ஷாட் ஒவ்வொண்ணும் பயங்கரமா இருக்கே.. ஜிம்பாப்வே கிட்ட பொங்கிய சூர்யா குமார் யாதவ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு T20 உலகக்கோப்பை தொடரில் அனாயசமாக விளையாடி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் சூரிய குமார் யாதவ்.

ஓ இதுனால தான் அவரு 360 டிகிரி பிளேயரா.. ஷாட் ஒவ்வொண்ணும் பயங்கரமா இருக்கே.. ஜிம்பாப்வே கிட்ட பொங்கிய சூர்யா குமார் யாதவ்..!

Also Read | Video : "நீ ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு".. சூறாவளி மாதிரி சுழன்ற 'SKY'.. "எங்க பந்து போட்டாலும் வெளிய தான்"..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று தற்போது முடிவடைந்துள்ளது. இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. குரூப் 1 ல் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற, இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்து அணி அடுத்ததாக தகுதி பெற்றிருந்தது. மேலும் குரூப் 2  வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

Suriya Kumar Yadhav 360 degree batting Against Zimbabwe

இந்திய அணியின் தற்போதைய நிலையை பொறுத்தவரையில் விராட் கோலி தெறிக்கும் பார்மில் இருக்கிறார். ஷாட்களை கனெக்ட் செய்யும் விதத்திலேயே தான் வின்டேஜ் கோலி தான் என்பதை நிரூபிக்கிறார் கோலி. உலகக்கோப்பையில் கோலி அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்றுதான். அவர் என்றுமே எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவால். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பவுலர்கள் சந்திக்கவே திணறும் ஒரு வீரர் சூரிய குமார் யாதவ்.

ஸ்டான்ட்ஸ் பார்த்து வெளியே வீசிவிடலாம் என்றெல்லாம் அவரிடம் எந்த ஒரு பவுலரும் நினைத்துவிட  முடியாது. அப்படியே நினைத்திருந்தாலும் ஜிம்பாப்வெ அணிக்கு எதிராக அவர் ஆடிய ஷாட்களை பார்த்தால் அதனை மறந்துவிட வேண்டியதுதான். நேற்றைய போட்டியில், கோலியிடம் இருந்து ஒரு அரைசதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. 26 ரன்களில் அவர் வெளியேறியதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது உண்மை தான். ஆனால், அணியை தோளில் சுமக்கவே அங்கே பேட்டோடு காத்திருந்தார் சூரிய குமார் யாதவ்.

Suriya Kumar Yadhav 360 degree batting Against Zimbabwe

ஆட்டத்தின் இறுதி ஓவர்களில்  360 டிகிரியில் ஆடி அனாயசமாக சிக்ஸர்களை பறக்கவிட்டார் சூர்யா. குறிப்பாக ஆஃப் சைடு வீசப்பட்ட பந்தை லெக் சைடில் தூக்கி சாத்திய போது ரசிகர்கள் ஒருகணம் அசந்து போனார்கள் என்றே சொல்லவேண்டும். ஜிம்பாப்வே வீரர் Richard Ngrava வீசிய கடைசி ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள், அவர் ஏன் 360 பிளேயர் என்பதற்கு சாட்சி சொல்லும் விதத்தில் அமைந்திருந்தன. பந்தின் வேகம், ஸ்விங் என அத்தனையும் கணித்து, நம்ப முடியாத பக்கத்தில், நம்ப முடியாத வகையில் ஒரு ஷாட் ஆடி சிக்ஸராக மாற்றும் சூர்யாவின் இந்த ஃபார்ம் அடுத்துவரும் அரையிறுதி போட்டியிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பேசி வருகின்றனர்.

Suriya Kumar Yadhav 360 degree batting Against Zimbabwe

இதனிடையே சூரிய குமார் யாதவின் ஷாட்களை ஒருங்கிணைத்து கிருஷ்ணா என்னும் ரசிகர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also Read | "Warning-லாம் கிடையாது.. இத செஞ்சா உடனே அக்கவுண்டை தூக்கிடுவோம்".. எலான் மஸ்க் அடுத்த அதிரடி..

CRICKET, SURIYA KUMAR YADHAV, SURIYA KUMAR YADHAV 360 DEGREE BATTING, ZIMBABWE, T20 WORLD CUP, சூரிய குமார் யாதவ்

மற்ற செய்திகள்