'ஆரோக்கியமான சர்ஃபிங் சமூகத்தை உருவாக்குவது தான் நோக்கம்'... Surfing Federation of India கவர்னிங் கவுசிலின் புதிய தலைவர் 'அருண் வாசு' அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்ஃபிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Surf Turf அருண் வாசு தலைமையிலான புதிய நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், இதற்கு முன்பு இருந்த நிர்வாக குழுவின் நல்ல பணிகளைத் தொடர்வதோடு, ஆரோக்கியமான சர்ஃபிங் சமூகத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்த விளையாட்டையும், அதில் இருக்கும் வீரர், வீராங்கனைகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆரோக்கியமான சர்ஃபிங் சமூகத்தை உருவாக்குவது தான் நோக்கம்'... Surfing Federation of India கவர்னிங் கவுசிலின் புதிய தலைவர் 'அருண் வாசு' அறிவிப்பு!

அருண் வாசு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக குழு surfing, paddle-boarding மற்றும் பிற துறைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அதில் முக்கியமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு இந்த விளையாட்டின் வளர்ச்சியைப் பெருக்கப் பல வழிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 

TT குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், Honorary Consul for Sweden (South India)'வாக இருக்கும் அருண் வாசு, தனது 13 வயது முதல் windsurfing செய்து வருகிறார். சாகச சுற்றுலாத் துறையில் 37 வருட அனுபவம் கொண்ட இவர், நீர் விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

Surfing Federation of India headed by the new President Arun Vasu

உலக அளவிலான surfing விளையாட்டில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்று, உலக அளவில் இந்திய வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது பெரும் கனவாக உள்ளது. இந்த நிர்வாக கவுன்சிலில் முன்னாள் டென்னிஸ் வீரரும், அர்ஜுனா விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சோம் தேவ் வர்மன் இருக்கிறார். இந்த நிர்வாக குழுவின் முக்கிய நோக்கமே விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது தான். அதில் சோம் தேவ் வர்மனின் பங்கு முக்கியமாக இருக்கும்.

Surfing Federation of India headed by the new President Arun Vasu

அதே போன்று சர்ஃபிங்யில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிர்வாக குழுவில் மருத்துவரும், surfing துறையில் நீண்ட அனுபவம் பெற்றவருமான,  Ishani Choudhary இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துப் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்க முடியும். இந்த புதிய நிர்வாக குழு உற்சாகத்துடன் தனது பணிகளைத் தொடங்கவிருக்கும் நிலையில், surfing விளையாட்டை இந்திய அளவில் வளர்த்தெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருக்கிறது.

 

 

மற்ற செய்திகள்