அப்படின்னா இந்த வருசம் ‘கப்’ நமக்குத்தானா..! ‘சின்ன தல’ சொன்ன அந்த வார்த்தை.. சிஎஸ்கே ரசிகர்கள் ‘ஹேப்பி’ அண்ணாச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து சுரேஷ் ரெய்னா உருக்கமாக பேசியுள்ளார்.

அப்படின்னா இந்த வருசம் ‘கப்’ நமக்குத்தானா..! ‘சின்ன தல’ சொன்ன அந்த வார்த்தை.. சிஎஸ்கே ரசிகர்கள் ‘ஹேப்பி’ அண்ணாச்சி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகின்றனர்.

Suresh Raina wants CSK to win IPL 2021 trophy for Dhoni

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனி குறித்து சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். அதில், ‘தோனியும், நானும் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்காக நிறைய போட்டிகளில் இணைந்து விளையாடி இருக்கிறோம். இரண்டு பேரும் சிஎஸ்கேவுக்காக ஏறக்குறைய 200 போட்டிகள் விளையாடி இருப்போம். அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரும் என்மீது அன்பு வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன்’ என சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இருவரும் இணைந்தே நிறைய போட்டிகளை வென்றும் இருக்கிறோம், தோற்றும் இருக்கிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை மட்டும் குறைந்ததே இல்லை. அதனால் இந்த ஆண்டு தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’ என சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

Suresh Raina wants CSK to win IPL 2021 trophy for Dhoni

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018-ம் ஆண்டு என மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்