கிரிக்கெட்டில் ஒரு ‘தேவா, சூர்யா’!.. தோனி ஓய்வை அறிவிச்சதும் நானும் ஏன் சொன்னேன்..? ‘சின்ன தல’ சொன்ன உருக்கமான பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதும், தானும் ஓய்வை அறிவிக்க காரணம் என்னவென்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஒரு ‘தேவா, சூர்யா’!.. தோனி ஓய்வை அறிவிச்சதும் நானும் ஏன் சொன்னேன்..? ‘சின்ன தல’ சொன்ன உருக்கமான பதில்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. அதனை அடுத்த சில நிமிடங்களிலேயெ சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்தார். இரண்டு முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Suresh Raina reveals why he followed MS Dhoni into retirement

இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பேட்டி ஒன்றில் பேசிய ரெய்னா, தோனியுடன் சேர்ந்து ஓய்வு அறிப்பை வெளியிட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதில், ‘இதுதான் சரியான தருணம் என உணர்ந்தேன். எங்களது நட்பு மிகவும் வித்தியாசமானது. நாங்கள் இருவரும் இணைந்து நாட்டுக்காகவும், ஐபிஎல் போட்டிகளிலும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளோம். நாங்கள் ஒரு நாள் சந்தித்து இதுதொடர்பாக (ஓய்வு) முடிவெடுத்தோம்’ என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Suresh Raina reveals why he followed MS Dhoni into retirement

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் சார்பாக சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. அதற்கு, பால்கனியுடன் கூடிய அறை தரவில்லை என்று சிஎஸ்கே நிர்வாகத்திடம் ரெய்னா அதிர்ப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அப்போது வெளியாகவில்லை. அதேசமயம் ரெய்னாவின் உறவினர்கள் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அவரது மாமா உயிரிழந்தார். இதன்காரணமாகவே ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என கூறப்பட்டது.

Suresh Raina reveals why he followed MS Dhoni into retirement

தற்போது இந்த சர்ச்சைக்கு ரெய்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பதிலளித்த அவர், ‘அந்த சூழ்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் இருப்பதே சரியாக இருக்குமென நினைத்தேன். எனது குடும்பம் ஒரு பெரும் இழப்பை சந்தித்திருந்தது. அந்த தருணத்தில் நான் குடும்பத்தினருடன் இல்லாமல் கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல என்று முடிவெடுத்தேன். எனது மனைவியும் நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். என் குடும்பத்தினருக்காக திடீரென நான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினேன்’ என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்