“தினேஷ் கார்த்திக் மாதிரி அவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கணும்”.. சீனியர் வீரருக்காக குரல் கொடுத்த ரெய்னா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெறாதது குறித்து சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

“தினேஷ் கார்த்திக் மாதிரி அவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கணும்”.. சீனியர் வீரருக்காக குரல் கொடுத்த ரெய்னா..!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசிய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடிய இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக இருந்தார். அதேவேளையில் ஷிகர் தவான், ராகுல் திரிபாதி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

Suresh Raina questions Dhawan exclusion from Indian team

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம்பெறாதது குறித்து சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘ஷிகர் தவான் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார். எந்தவொரு கேப்டனும் தவான் மாதிரியான வீரரை விரும்புவார்கள். மிகவும் ஜாலியாக இருப்பார். அணியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்றால், கண்டிப்பாக ஷிகர் தவானுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். கடந்த 3-4 ஆண்டுகளாக தவான் நன்றாக விளையாடி வருகிறார்’ என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்