மகனுடன் கிரிக்கெட் ஆடும் ரெய்னா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.. நடிகை ஸ்ருதிஹாசன் போட்ட கமெண்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சிறந்த வீரராக விளங்கி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இடதுகை பேட்ஸ்மேனான ரெய்னா, சர்வதேச போட்டிகளில் பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடிஓய்வும் பெற்றுள்ளார்.
Also Read | "33 வயசுல பாட்டியா??".. சொந்தமா குழந்தை பெத்துக்குறதுக்கு முன்னாடி பெண்ணுக்கு வந்த நிலை.. சுவாரஸ்ய பின்னணி!!
அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுமார் 10 சீசன்களுக்கு மேல் ஐபிஎல் தொடரில் ஆடி இருந்த ரெய்னா, ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரராகவும் வலம் வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடி இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்பாக அவரை விடுவித்திருந்தது.
தொடர்ந்து, ஏலத்திலும் ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா ஆட முடியாமல் போனது, அவரது ரசிகர்களை கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் கலந்து கொண்டிருந்தார் ரெய்னா.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் சில வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சுரேஷ் ரெய்னா. ஏதாவது உள்ளூர் தொடர்களில் ரெய்னா விளையாட போகிறார் என்ற ஆவலிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தனது மகனுடன் வீட்டிற்குள் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீட்டிற்குள் விளையாடும் இந்த கிரிக்கெட்டில் ரெய்னா பந்து வீச அவரது மகனான சுட்டிக் குழந்தை ரியோ பேட்டிங் செய்கிறார். பல இடங்களில் பந்தை சிறுவன் பறக்க விடும் நிலையில், வீடியோ பார்க்கும் பலரும் இதனால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தன்னுடைய கேப்ஷனில், "அப்பாவை போல பிள்ளையும். என்னுடைய மகன் அவரது க்யூட் Strokeகளில் கவனம் செலுத்தி வருகிறார். எனது இதயம் முழுவதும் நிறைந்து இருக்கிறது" என ரெய்னா குறிப்பிட்டுள்ளார். பலரும் சிறுவனின் திறனை பாராட்டி வரும் நிலையில், நிறைய கமெண்ட்டுகளையும் செய்து வருகின்றனர்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கைத்தட்டும் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ள நிலையில், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட பல பிரபலங்களும் ரெய்னாவின் மகனை பாராட்டி கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகியும் வருகிறது.
மற்ற செய்திகள்