"எவ்ளோ நாள் ஆச்சு இவங்கள இப்டி பாத்து!!.." லண்டனில் மீட் செய்த தல, சின்ன தல.. "கண்ணே பட்டுடும் போல"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடந்திருந்த டி 20 தொடரை இந்திய அணி வென்றிருந்தது.

"எவ்ளோ நாள் ஆச்சு இவங்கள இப்டி பாத்து!!.." லண்டனில் மீட் செய்த தல, சின்ன தல.. "கண்ணே பட்டுடும் போல"

Also Read | ரட்சகன் ஹீரோயினுடன லலித் மோடி 'Dating' -ஆ.? ஒரே ஒரு பதிவால் பரபரப்பான சோசியல் மீடியா.!

முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, விக்கெட் எதுவும் இழக்காமலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பல சாதனைகளையும் படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (15.07.2022) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய இங்கிலாந்து அணி, 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 246 ரன்கள் எடுத்திருந்தது.

suresh raina meets ms dhoni in lords amid second odi

அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்களும், டேவிட் வில்லி 41 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாஹல் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பெரிதாக சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 39 வது ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 146 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. இதனால், இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாப்லீ 6 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார்.

suresh raina meets ms dhoni in lords amid second odi

இந்நிலையில், இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர், மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இதில், ஹைலைட்டாக அமைந்தது தோனி மற்றும் ரெய்னா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ரெய்னா, சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து ஆடி வந்தனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு முந்தைய ஏலத்தில், ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்கவில்லை. இது சிஎஸ்கே மற்றும் ரெய்னா ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

suresh raina meets ms dhoni in lords amid second odi

தொடர்ந்து, சிஎஸ்கே அணி குறித்து ரெய்னா ட்வீட் செய்து வரும் நிலையில், கடந்த வாரம் தோனியின் பிறந்த நாளின் போது கூட, அவரை சகோதரர் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், லண்டனில் வைத்து தோனி மற்றும் ரெய்னா சேர்ந்து நிற்கும் புகைப்படமும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

suresh raina meets ms dhoni in lords amid second odi

நீண்ட நாட்களுக்கு பின்னர், ரெய்னா மற்றும் தோனி ஆகியோரை ஒரே இடத்தில் பார்த்தது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | பத்தி எரியும் எலான் மஸ்க் - ட்விட்டர் விவகாரம்.. கூலாக ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. "நெத்தியடி பதில்'னா இதுதான் போல.."

SURESH RAINA, MS DHONI, SURESH RAINA MEETS MS DHONI

மற்ற செய்திகள்