சிஎஸ்கே இன்ஸ்டா பதிவில்.. சுரேஷ் ரெய்னா போட்ட கமெண்ட்.. "அவரு என்னைக்குமே சின்ன தல தான்யா.." நெகிழ்ந்து போன ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் கடந்த மாதம் முடிவடைந்து, ஐபிஎல் போட்டிகளுக்கு வேண்டி அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.
முன்னதாக ஏலத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிராவோ, ராயுடு உள்ளிட்ட கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய வீரர்களை மீண்டும் அணியில் இணைத்திருந்தது.
ஆனால், 'Mr. IPL' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் எடுக்க, எந்த முயற்சிகளையும் சென்னை அணி மேற்கொள்ளவில்லை.
ரசிகர்கள் வேதனை
அது மட்டுமில்லாமல், எந்த அணிகளும் ரெய்னாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்காததால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யாத சம்பவம், அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினையும், வேதனையையும் ஏற்படுத்திருந்தது.
Unsold ரெய்னா
10 ஆண்டுகளுக்கு மேல், சென்னை அணிக்காக ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி, அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அதே போல, சக வீரர்களையும் ஊக்குவிக்க ரெய்னா தவறுவதில்லை. அப்படி ஒரு வீரரை சென்னை அணி எடுக்காமல் போனது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை உண்டு பண்ணியிருந்தது.
குஜராத் அணியில் ரெய்னா?
தொடர்ந்து, ரெய்னாவை அணியில் எடுக்காமல் போனதற்கான விளக்கத்தையும் சிஎஸ்கே அணி அளித்திருந்தது. ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர் என்பதால், ரசிகர்கள் சற்று வேதனையில் உள்ளனர். இதனிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், ரெய்னாவை மாற்று வீரராக எடுங்கள் எனக்கூறி, ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
மீண்டும் நெகிழ்ந்த ரசிகர்கள்
அவருக்கு குஜராத் ஜெர்சி போட்டு எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வந்தனர். ஆனால், இது பற்றி குஜராத் அணியிடம் இருந்து, எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை மீண்டும் ஒரு முறை சுரேஷ் ரெய்னா நெகிழ செய்துள்ளார்.
லெஜண்ட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அம்பத்தி ராயுடுவை வரவேற்று, அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தது. அதில், கமெண்ட் செய்த சுரேஷ் ரெய்னா, ராயுடுவை 'லெஜண்ட்' என குறிப்பிட்டுள்ளார்.
'சின்ன தல'
சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்காமல் போனாலும், ரெய்னாவுக்கு இன்னும் சிஎஸ்கே அணி மீது அதே பந்தம் இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர். சுமார் 2,000-த்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளை ரெய்னாவின் கமெண்ட்டின் கீழ், ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்