‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா விதிகளை மீறியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென அறிவித்த ஓய்விற்கு பின், குடும்ப விவகாரம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல், துபாயில் இருந்து நாடு திரும்பினார். அதன்பின்னர் பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளை சுரேஷ் ரெய்னா செய்து வருகிறார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

Suresh Raina arrested, released on bail for attending party that viola

தன்னை பல்வேறு விஷயங்களில் பிசியாக வைத்துக் கொண்டு வரும் சுரேஷ் ரெய்னா நேற்று  இரவு மும்பை விமான நிலையத்தின் அருகில் உள்ள டிராகன் பிளை கிளப்பில் ஒன்றில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் பாடகர் குரு ரந்தவா, பாலிவுட் பிரபலம் சுசானே கான் மற்றும் ரெய்னாவின் நண்பர்கள் சிலர் இந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர்.

Suresh Raina arrested, released on bail for attending party that viola

இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி மும்பை போலீசார், சட்டப்பிரிவு 188, 269, 34 கீழ் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேரை கைது செய்தனர். கிளப்பில் பணியாற்றிய நபர்களும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சுரேஷ் ரெய்னா, சுசானே ஆகியோர் சில மணி நேரத்தில்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்