‘சூப்பர்மேன் ஜட்டு இருக்கும்போது யாருக்குமே அது கிடைக்காது’.. ‘எல்லாத்தையும் அவரே திருடிறாரு’.. ஜடேஜாவை கிண்டலடித்த டூ பிளசி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேட்சுகள் தனக்கு கிடைக்காமல் ஜடேஜா திருடி விடுவதாக டூ பிளசி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

‘சூப்பர்மேன் ஜட்டு இருக்கும்போது யாருக்குமே அது கிடைக்காது’.. ‘எல்லாத்தையும் அவரே திருடிறாரு’.. ஜடேஜாவை கிண்டலடித்த டூ பிளசி..!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசரஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர்.

Superman Jadeja is stealing catches, says Faf du Plessis

இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களும், டூ பிளசி 56 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை ரஷித் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

Superman Jadeja is stealing catches, says Faf du Plessis

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே வீரர் டூ பிளசி, ‘எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது, ஏனென்றால் அதிக கேட்சுகளை ஜடேஜா பிடித்து விடுகிறார். மைதானத்தில் ஜடேஜாவே கேட்சுகளை திருடி விடுகிறார். இன்று ஒரு கேட்ச் பிடித்ததில் மகிழ்ச்சிதான். சூப்பர் மேன் ஜடேஜா இருக்கும் இடத்தில் ஒரு கேட்ச் பிடித்தது மகிழ்ச்சியான தருணம்’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

Superman Jadeja is stealing catches, says Faf du Plessis

இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3-வது அரைசதம் அடித்ததன் மூலம் 270 ரன்களை டூ பிளசி குவித்துள்ளார். இதனால் அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், ‘ஆமாம் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வெற்றி பெறுவது அருமையான ஒன்றுதான். நானும் ருதுராஜும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக இருக்கிறது என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடக்கம் சிறப்பாக அமைந்தால், அணிக்கு சிறப்பாக இருக்கும்’ என டூ பிளசி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்