தலைவர் என்ட்ரி.. இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி.. நேரில் கண்டுகளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியை காண மும்பை சென்றிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தலைவர் என்ட்ரி.. இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி.. நேரில் கண்டுகளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

Super Star Rajinikanth watching India Vs Australia First ODI

Images are subject to © copyright to their respective owners.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

Super Star Rajinikanth watching India Vs Australia First ODI

Images are subject to © copyright to their respective owners.

தலைவர் என்ட்ரி

இந்த சூழ்நிலையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். ஓய்வில் இருக்கும் ரோஹித் ஷர்மா கடைசி இரு ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Super Star Rajinikanth watching India Vs Australia First ODI

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றிருக்கிறார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டியை அவர் மைதானத்தில் இருந்து கண்டுகளிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | நம்ம ரோஹித்தா இது?.. மச்சான் கல்யாணத்தில் தாறுமாறு ஸ்டெப் போட்ட ரோஹித் ஷர்மா.. வைரலாகும் வீடியோ.!

RAJINIKANTH, SUPER STAR RAJINIKANTH, INDIA VS AUSTRALIA, INDIA VS AUSTRALIA FIRST ODI

மற்ற செய்திகள்