கோலிக்கு முடிவெடுக்குற திறமை சுத்தமா கிடையாது..! அதுக்கு அந்த ஆஸ்திரேலியா மேட்ச் தான் உதாரணம்.. சுனில் கவாஸ்கர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: விராட் கோலிக்கு முடிவெடுக்கும் திறன் அறவே கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோலிக்கு முடிவெடுக்குற திறமை சுத்தமா கிடையாது..! அதுக்கு அந்த ஆஸ்திரேலியா மேட்ச் தான் உதாரணம்.. சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட்  அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி  விலகுவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்த முடிவால் விராத் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .டி20,ஒரு நாள் போட்டி, IPL பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விராத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "அணியை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு 7 வருடங்கள் கடின உழைப்பு மற்றும் இடைவிடாத விடாமுயற்சியுடன் செயல்பட்டேன். நான் முழு நேர்மையுடன் வேலையைச் செய்தேன், எதையும் சுலபமாக விட்டுவிடவில்லை. ஒவ்வொரு விஷயமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக பதவி விலகுகிறேன்.

sunny gavaskar about virat kohli decision making

பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில இறக்கங்கள் உள்ளன, ஆனால் முயற்சியின்மையோ அல்லது நம்பிக்கையின்மையோ இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், என்னால் அதைச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய்வது சரியானதல்ல என்று எனக்குத் தெரியும். எனது இதயத்தில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது, மேலும் எனது அணிக்கு நான் நேர்மையற்றவராக இருக்க முடியாது.

இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்.. திரும்பி வீட்டுக்கு வர்றப்போ 12 கோடிக்கு அதிபதி.. சில மணி நேரங்களில் அடித்த ஜாக்பாட்!

sunny gavaskar about virat kohli decision making

எனது நாட்டை இவ்வளவு நீண்ட காலத்திற்கு வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் முக்கியமாக அணிக்காக நான் கொண்டிருந்த பார்வையை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் ஒத்துழைத்த அணி வீரர்களுக்கும், இந்த பயணத்தை மறக்கமுடியாததாகவும் அழகாகவும் மாற்றிய வீரர்களுக்கும், டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்திய இந்த வாகனத்தின் பின்னணியில் இருந்த ரவி சாஸ்திரி மற்றும் குழுவிற்கும், கடைசியாக, என்னை ஒரு கேப்டனாக நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனிநபராக என்னைக் கண்டறிந்த எம்எஸ் தோனிக்கும் நன்றி". எனக் குறிப்பிட்டு இருந்தார்.

sunny gavaskar about virat kohli decision making

இந்நிலையில் விராத் கோலியின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக சுனில் கவாஸ்கர் விராத் கோலி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.  அதில் "கடந்த 2019ல் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது, ​​கோஹ்லி அணியுடன் இருக்கவில்லை, இது அணியின் மீது கோலி எவ்வளவு ஆர்வம், பற்று வைத்துள்ளார் என்பதையும், இந்திய அணியை மனதில் வைத்து அவரது தரப்பில் இருந்து எவ்வாறு முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது" என கூறியுள்ளார்.

வெடித்து சிதறிய 'ராட்சஸ' நட்சத்திரம்.. சூரியனை விட 10 மடங்கு பெருசு.. பால்வழி அண்டத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள்!

sunny gavaskar about virat kohli decision making

இதன் மூலம் விராத் முடிவெடுக்கும் திறனை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளார். அடிலெய்டு டெஸ்ட் முடிந்ததும் விராத், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிரசவத்துக்காக இந்தியா திரும்பிவிட்டார். அடுத்த போட்டிகளுக்கு ராஹானே தலைமை ஏற்று இந்திய அணியை வெற்றிபெற வழி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

INDIAN CAPTAIN, SUNNY GAVASKAR, VIRAT KOHLI, விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணி

மற்ற செய்திகள்