"இத்தன மேட்சுக்கு அப்புறம் இப்படி ஒரு Complaint-ஆ?!!" - 'நட்சத்திர வீரர் மேல்... திடீரென எழுந்த சந்தேகம்!'... 'என்னவாகுமோ என கலக்கத்தில் அணி!!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சுனில் நரின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இத்தன மேட்சுக்கு அப்புறம் இப்படி ஒரு Complaint-ஆ?!!" - 'நட்சத்திர வீரர் மேல்... திடீரென எழுந்த சந்தேகம்!'... 'என்னவாகுமோ என கலக்கத்தில் அணி!!!'

பஞ்சாப்புக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அபாரமாக பந்து வீசி அணிக்கு 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தந்தார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் அவருடைய பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் உல்ஹாஸ் காந்தி, கிறிஸ் கப்பானி இருவரும் புகார் அளித்துள்ளனர்.

Sunil Narine Reported For Suspected Bowling Action KKR Surprised

இதனால் சுனில் நரின் பெயர் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து பந்து வீசலாம் எனவும், மறுபடியும் நரின் இதே போன்ற புகாரில் சிக்கினால் அவருடைய பந்து வீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்படும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Sunil Narine Reported For Suspected Bowling Action KKR Surprised

இதுபற்றிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அறிக்கையில், "சுனில் நரினின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்துள்ளது எங்கள் அணிக்கும் சுனில் நரினுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் 115க்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் நரின் விளையாடியுள்ளார்.  இதற்கு முன்பு சுனில் நரினின் பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுந்தாலும், அவருடைய பந்து வீச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகரித்துள்ளது. அதன்பிறகு  68  ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரின் விளையாடியுள்ளார்.

Sunil Narine Reported For Suspected Bowling Action KKR Surprised

இந்த ஆண்டு போட்டியில் அவர் 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை அவருடைய பந்துவீச்சு முறை குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. எனினும் இதுதொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் நடவடிக்கையை மதிக்கிறோம். ஐபிஎல் நிர்வாகத்துடன் இணைந்து பேசிவருகிறோம். இந்த விவகாரத்தில் உரிய தீர்வு விரைவில் எட்டப்படும் என நம்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்