'இந்த இடைவெளில ஒரு டிரக்கே போகலாம்’... ‘இரண்டு இளம் வீரர்களையும்’... 'கோபத்தில் சாடிய முன்னாள் கேப்டன்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

'இந்த இடைவெளில ஒரு டிரக்கே போகலாம்’... ‘இரண்டு இளம் வீரர்களையும்’... 'கோபத்தில் சாடிய முன்னாள் கேப்டன்’...!!!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இன்று காலை முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில், இளம் வீரரான ப்ரித்வி ஷா போட்டியின் இரண்டாவது பந்திலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு துவக்க வீரரான மயங்க் அகர்வால் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்திருந்த போது, பேட் கம்மின்ஸ் வீசிய துல்லியமான பந்துவீச்சில் அவுட் ஆகி அவரும் வெளியேறினார். சிறப்பான துவக்கத்தை அளிக்க வேண்டிய துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Sunil Gavaskar tears into India openers after failure in 1st Test

ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்களின் பேட் (BAT) மற்றும் பேடிற்கு (PAD) இடையில் அதிகமான இடைவெளியை ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் விட்டதாலேயே அவர்களால் நிலைத்து ஆட முடியாமல் போனதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேட்டிற்கும் பேடிற்கும் இடையிலான இடைவெளி சரியாக இருந்தால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மயங்க் அகர்வாலின் பேடிற்கும், பேட்டிற்கும் இடையிலான தூரத்தில் ஒரு டிரக் கூட சென்றிருக்க முடியும் என்றும் சுனில் கவாஸ்கர் கடுமையாக தெரிவித்துள்ளார். இதுவே மயங்க் மற்றும் ப்ரித்வி ஷா செய்த மிகப்பெரிய தவறு என்றும் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்