“ரஸல் இருக்கும்போது தேவையில்லாம அவருக்கு ஏன் அந்த வேலை கொடுக்குறீங்க?”.. KKR-ஐ விட்டு விளாசிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணாவை 6-வது வீரராக களமிறக்கியது குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read | திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் 3 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 6 ரன்னிலும் அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த பாபா இந்திரஜித் 6 ரன்னிலும், சுனில் நரைன் மற்றும் ஆன்ட்ரே ரஸல் ஆகிய இருவரும் டக் அவுட்டாகி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
மறுபுறம் அணியை சரிவில் இருந்து மீட்க முயன்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய நிதிஷ் ராணாவும், ரிங்கு சிங்கும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதில் நிதிஷ் ராணா 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது.
இதனை அடுத்து விளையாடிய டெல்லி அணி, 19-வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 42 ரன்களும், ரோவ்மேன் பவல் 33 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்காதது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நிதிஷ் ராணா நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர். ஆனால் அவர் 6-வது வீரராக அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரு ஃபினிஷர் ரோல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், ஆண்ட்ரே ரஸல் என்ற ஒரு ஃபினிஷர் இருக்கும்போது, நிதிஷ் ராணாவை ஏன் அதே வேலையை செய்ய விரும்புகிறீர்கள்?
நிதிஷ் ராணாவை 3-வது வீரராக களமிறக்க முடியாது. ஏனென்றால் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். எனவே ராணாவை 4-வது வீரராக களமிறங்க செய்வதுதான் சரி. ராணாவை தாமதமாக அனுப்பியதில் எந்த அர்த்தமும் இல்லை, அவரை முன்கூட்டியே களமிறக்கி நிறைய பந்துகள் ஆட வைக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தாமதமாக அவர் களத்திற்கு வந்தால் எப்படி அணியின் ஸ்கோர் உயரும்’ என காட்டமாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்