பாண்ட்யா பவுலிங் பண்ணலைன்னா பேசாம இந்த ‘பையனை’ டீம்ல எடுங்க.. ‘செம ஃபார்ம்ல இருக்காரு’.. சுனில் கவாஸ்கர் முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. ஆனால் அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக வேறொரு வீரரை அணியில் சேர்க்க வேண்டும் பலரும் கூறியுள்ளனர்.
அதற்கு காரணம், சமீப காலமாக ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்வதில்லை. நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட அவர் பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் செய்தபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அப்போட்டியிலும் அவர் பவுலிங் செய்யவில்லை.
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இப்போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தோள்ப்பட்டையில் ஏற்ப்பட்ட காயத்தால் ஹர்திக் பாண்ட்யா பந்துவீசமாட்டார் என்றால், அவருக்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்க்கலாம்.
அதேபோல் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை விளையாட வைக்கலாம். இந்த இரண்டு மாற்றங்களை நியூஸிலாந்து அணிக்கு எதிரான செய்யலாம். நிறைய மாற்றங்கள் செய்தால் எதிரணிக்கு நாம் பயப்படுகிறோம் என்பதை காட்டுவதுபோல் அமைந்துவிடும்’ என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்