இனிமே அந்த ‘சீனியர்’ பவுலர் வேணாம்.. அதுக்கு பதிலா நம்ம ‘சிஎஸ்கே’ தங்கத்த கொண்டு வாங்க.. கடுப்பான கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு உலகக்கோப்பை
நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பையும், அடுத்த ஆண்டு ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையும் நடைபெற உள்ளது. இரண்டு உலகக்கோப்பை தொடர்களும் அடுத்தடுத்து வருவதால், தற்போது இருந்தே அனைத்து அணிகளும் வீரர்களை தயார் செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டன.
பிசிசிஐ ஆலோசனை
இந்த நிலையில், பிசிசிஐயும் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியா முனைப்பு காட்டும் என தெரிகிறது.
முனைப்பு காட்டும் இந்தியா
இதனை அடுத்து 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. அதனால் ஒருநாள் உலகக்கோப்பையையும் வெல்ல இந்திய அணி நிச்சயம் முன்னைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஒருநாள் அணியை தேர்வு செய்ய இப்போது இருந்தே பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
வேகப்பந்து வீச்சாளர் தேடல்
இதற்கான அணியில் வேகப்பந்து பவுலர்களை பொறுத்தவரை பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போகும் 3-வது பவுலரைத்தான் பிசிசிஐ தேடி வருகிறது. முன்பு புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஆனால், 2020-ம் ஆண்டு காயத்தை எதிர்கொண்ட பிறகு அவரது பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்த சராசரியாக 68 ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். அதனால் இவருக்கு மாற்று பவுலரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
சுனில் கவாஸ்கர் கருத்து
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘புவனேஷ்வர் குமாரின் வேகம் குறைந்துவிட்டது. துல்லியமான பந்துவீச்சையும் இழந்துவிட்டார். அவர் மீண்டும், ஆரம்ப கட்ட பயிற்சியை தொடங்கி, தன்னை மேம்படுத்தினால் மட்டுமே பழைய பார்முக்கு திரும்ப முடியும். அப்படி செய்தால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இவர் பார்முக்கு திரும்பும்வரை தீபக் சஹாரை பயன்படுத்தலாம். ஒருவேளை தீபக் சஹார் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால், அவரையே முதன்மை பவுலராக சேர்த்துக்கொள்ளலாம்’ என சுனில் கவாஸ்கர் கூறினார்.
சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், ‘தீபக் சஹாரால் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடியும். அதுமட்டுமல்ல பேட்டிங்கிலும் உதவக் கூடியவர். இதுவரை 2 அரை சதங்களை விளாசியுள்ளார். புவனேஷ்வர் குமார் சிறப்பாகத்தான் செயல்பட்டிருக்கிறார். ஆனாலும் நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவெடுத்துத்தானே ஆக வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இனி அவரோட பவுலிங் எல்லாம் எடுபடாது.. பேசாம அந்த ‘சிஎஸ்கே’ தங்கத்த கொண்டு வாங்கய்யா.. சூப்பர் ‘ஐடியா’ கொடுத்த சுனில் கவாஸ்கர்..!
மற்ற செய்திகள்