"இவர் தான் இந்திய 'கிரிக்கெட்' டீமோட அடுத்த 'ஸ்டார்'... யார வேணா கேளுங்க.." - 'இளம்' வீரரை கை காட்டும் 'சுனில்' கவாஸ்கர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

"இவர் தான் இந்திய 'கிரிக்கெட்' டீமோட அடுத்த 'ஸ்டார்'... யார வேணா கேளுங்க.." - 'இளம்' வீரரை கை காட்டும் 'சுனில்' கவாஸ்கர்..

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஸ்டாராக இளம்வீரர் சுப்மான் கில் திகழ்வார் என தெரிவித்துள்ளார். சுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் மேலும் தெரிவிக்கையில், 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கில் மீது அதிக நம்பிக்கை வைத்து அவரை அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறக்கினால் நிச்சயம் அவர் தனது திறனை நிரூபிக்க இந்த ஐபிஎல் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்' என்றார்.

மேலும், 'இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரிடமும் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரர் யார் என கேட்டால் அனைவரும் சுப்மான் கில் பெயரைத் தான் சொல்லுவார்கள். அதனால் கில் ஒரு சிறந்த ஆட்டத்தை இந்த முறை வெளிப்படுத்த வேண்டும்' எனக் கூறினார்.

தொடர்ந்து, இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'கொல்கத்தா அணி இந்த முறை சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இந்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற கொல்கத்தா அணிக்கு அதிகமான வாய்ப்புள்ளது. மற்ற அணிகளுக்கு மிகவும் ஆபத்தான அணியாக கொல்கத்தா திகழும் என்பதில் சந்தேகமில்லை' என கவாஸ்கர் தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தங்களது முதல் ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை மறுநாள் (செப் 23) எதிர்கொள்ளவுள்ளது.

மற்ற செய்திகள்