டிரெஸ்ஸிங் ரூம்ல வேணும்னா 'ஹெல்ப்' பண்ணலாம்...! மத்தபடி 'தோனி'யால எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது...! - இந்திய அணியின் 'முன்னாள் வீரர்' கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது நடந்து வரும் டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிரெஸ்ஸிங் ரூம்ல வேணும்னா 'ஹெல்ப்' பண்ணலாம்...! மத்தபடி 'தோனி'யால எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது...! - இந்திய அணியின் 'முன்னாள் வீரர்' கருத்து...!

இந்த நிலையில் அவரது பணியின் தாக்கம் எப்படி இருக்கும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

Sunil Gavaskar says mentor Dhoni can't make a big impact

இதுகுறித்து அவர் கூறுகையில், “வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது விரைந்து நடைபெற்று முடியும் போட்டி என்பதால் தோனி, டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவலாம். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படுகிற போது கள வியூகங்களையும் அவர் அமைத்து தரலாம்.

Sunil Gavaskar says mentor Dhoni can't make a big impact

நேர இடைவேளையின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி போட்டியின் அழுத்தம் தொடங்கி வெற்றிபெறும் முனைப்பு என அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு மைதானத்தில் நிற்கும் வீரர்கள் தான். தோனியை இந்த மாதிரியான பணிக்கு நியமித்துள்ளதை வரவேற்கிறேன்.

Sunil Gavaskar says mentor Dhoni can't make a big impact

அதேப் போன்று நாக் அவுட் நிலைகளில் சரியான ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் பாதகமாக அமையலாம். மேலும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டியதும் முக்கியம்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்