"இத இந்திய டீம் மறக்கவே கூடாது".. கோப்பையை பறிகொடுத்த இந்தியா.. கடுகடுத்த கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா பறிகொடுத்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

"இத இந்திய டீம் மறக்கவே கூடாது".. கோப்பையை பறிகொடுத்த இந்தியா.. கடுகடுத்த கவாஸ்கர்..!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இது அவருக்கு கடைசி IPL-ஆ இருக்கலாம்".. CSK தோனியின் ஓய்வு & ஃபிட்னஸ் பற்றி பத்ரிநாத்! VIDEO

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதனை இந்திய அணி பெற்று 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

ஒருநாள் தொடர்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Sunil Gavaskar says indian team should remember this loss

Images are subject to © copyright to their respective owners.

கோப்பையை கைப்பற்றிய ஆஸி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 270 ரன்களை நிர்ணயித்தது. இதனை சேசிங் செய்த இந்தியா 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கோலி மட்டும் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர்,"இந்திய அணி இந்த தோல்வியை மறக்க கூடாது. இந்த வருடம் அக்டோபர் - நவம்பரில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை மீண்டும் சந்திக்க நேரிடலாம். இந்திய அணி வீரர்கள் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.

Sunil Gavaskar says indian team should remember this loss

Images are subject to © copyright to their respective owners.

இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மேலும், ஆஸ்திரேலிய அணி கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம். இந்திய பேட்ஸ்மேன்களால் சிங்கிள்ஸ் எடுக்க முடியவில்லை. சில நேரங்களில் இப்படியான தோல்வியை இந்திய வீரர்கள் மறந்துவிடுவார்கள். அந்த தவறை வீரர்கள் செய்ய கூடாது" என தெரிவித்திருக்கிறார்.

Also Read | "எப்போ சாகப்போறனு கேக்குற மாதிரி".. தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்த முரளி விஜய்! EXCLUSIVE

CRICKET, SUNIL GAVASKAR, INDIAN TEAM

மற்ற செய்திகள்