என்ன கேட்டீங்கன்னா 'அந்த தம்பி' தான் பாகிஸ்தான் 'டீம்'லையே ரொம்ப 'வீக்'கான பிளேயர்...! - சுனில் கவாஸ்கர் 'அதிரடி' கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலக கோப்பை தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் பாபர் அசாம் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பபரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 176 ரன்களை குவிக்க அடுத்ததாக 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதலில் தடுமாறியது.
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் கடைசி 3 ஓவர்களில் 37 ரன்களை தடுத்து நிறுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த 37 ரன்களையும் வெறும் 2 ஓவர்களில் அடித்து முடித்துவிட்டு ஜாலியாக நின்றனர். குறிப்பாக 19-வது ஓவரில் மேத்யூ வேட் அடித்த ஒரு கேட்ச்யை ஹசன் அலி தவற விட்டார். அவர் நழுவ விட்ட அந்த கேட்சே போட்டியின் தோல்விக்கு காரணம் என கேப்டன் உட்பட பலரும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறினர். பாகிஸ்தான் அணியின் பலவீனம் எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, 'முக்கியமான மேட்ச்களில் அழுத்தம் காரணமாக நல்ல பீல்டர்கள் கூட கேட்ச் மிஸ் பண்றங்க. அந்த வகையில் ஹசன் அலி எளிதான கேட்சை பிடிக்க தவறி விட்டார்.
என்னை கேட்டால் பாகிஸ்தான் அணியின் பலவீனமான வீரர் அவர்தான். இந்த தொடரின் அவர் சரியாக பந்தும் வீசவில்லை மேலும் பேட்டிங்கில் அவரின் சிறப்பு குறித்து இன்னும் தெரியவில்லை.
பீல்டிங் அவர் தவறு செய்துள்ளார். சில நேரங்களில் ஒவ்வொரு அணியிலும் பலவீனமான வீரர்கள் இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு ஹசன் அலி பலவீனமான வீரர்' என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்