"அத நான் சொல்லிட்டா... அப்புறம் 'எனக்கு' தான் தேவையில்லாத 'வம்பு'..." 'சுனில் கவாஸ்கர்' சொன்ன பரபரப்பு 'கருத்து'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலி, இந்தியா திரும்பியுள்ளதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரஹானே வழிநடத்தவுள்ளார்.
அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்திருந்த நிலையில், 195 ரன்களில் ஆல் அவுட் செய்து இந்திய அணி அசத்தியிருந்தது. தொடர்ந்து, பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரஹானேவின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'ரஹானே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் நன்றாக திட்டங்களை வகுத்து அதற்கேற்ப அணியை வழிநடத்துகிறார். ஒரு கேப்டனாக தனது பொறுப்பை உணர்ந்து ஆடும் ரஹானேவை பலர் கவனிக்க தொடங்கியுள்ளனர். அதே போல ரஹானே பவுலிங் தேர்வு செய்யும் முறை அற்புதமாக உள்ளது. தகுந்த இடங்களில் ஃபீல்டர்களையும் அவர் நிப்பாட்டுகிறார்.
இத்தனை சிறப்பம்சங்கள் இருந்த போதும் நான் ரஹானேவை அதிகம் பாராட்ட போவதில்லை. அப்படி நான் செய்தால் மும்பை வீரருக்கு அதிகம் ஆதரவு தருவதாக எல்லோரும் என்னை குற்றம் கூற ஆரம்பிப்பார்கள். நான் பாரபட்சமாக இருக்கிறேன் என கூறி விடுவார்கள். அதனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி கோலி இந்தியா திரும்பியிருந்த நிலையில், இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவை வழிநடத்தாமல் கோலி இந்தியா கிளம்பி விட்டார் என சுனில் கவாஸ்கர் கோலியை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்