என்னங்க இது அவரு கையில??.. இதுக்கு எல்லாம் கிரிக்கெட்'ல அனுமதி இருக்கா முதல்ல??.. கடுப்பான சுனில் கவாஸ்கர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையேயான முதல் டி 20 போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு நாள் தொடரை, இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
தொடர்ந்து, 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, நேற்று நடைபெற்றிருந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, பூரன் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
Ind Vs WI
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால், 19 ஆவது ஓவரில், இலக்கை எட்டி, டி 20 தொடரை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை நடைபெறவுள்ளது.
அனல் பறக்கும் போட்டி
இதில் வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால், மிகவும் தீவிரமாக இந்திய அணி தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் தோல்விக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் எண்ணத்தில், தீயாக தயாராகி வருகிறது.
கவனித்த சுனில் கவாஸ்கர்
இதனிடையே, முதல் டி 20 போட்டியில், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரை குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது, வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டோன் சேஷ் கையில், பேண்டேஜ் போல ஏதோ அணிந்திருப்பதைக் கவனித்துள்ளார்.
அனுமதி இருக்கா?
இதனைப் பற்றி வர்ணனையில் பேசிய சகவாஸ்கர், 'அது என்ன? அவர் கையுறை அணிந்திருக்கிறாரா?. அது கிரிக்கெட் போட்டியில் அனுமதிக்கப்பட்டதா?. என்னது அது?. இதனை, கிரிக்கெட் போட்டியில் அடிக்கடி பார்க்கிறோம். நிறைய ஃபீல்டர்கள் அதனை அணிகிறார்கள். விரல்களின் அடிப்பகுதியில் அதனை அணிவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர் உள்ளங்கையில் அல்லவா அணிந்துள்ளார்' என தெரிவித்தார்.
அணியக் கூடாது
அப்போது அவருடன் இருந்த மற்றொரு முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா, 'அது ஒரு கூடுதல் பாதுகாப்பு தான்' என தெரிவித்தார். இதற்கு பதில் சொன்ன சுனில் கவாஸ்கர், 'கேட்ச் வரும் போதோ, அல்லது, பந்து உங்களை நோக்கி வரும் போதோ, இப்படி உள்ளங்கையில் ஒன்றை அணிவது, உங்களுக்கு அதிக நன்மையைத் தரும். என்ன காரணமாக இருந்தாலும் அப்படி ஒன்றை அணிந்து விட்டு, போட்டியில் களமிறங்கக் கூடாது. விதிகள் மாறவில்லை என்றால் நன்றாக இருக்கும்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பலரது கண்ணில் படாமல் போன ஒன்றை உன்னிப்பாக கவனித்த சுனில் கவாஸ்கர், அது ஃபீல்டருக்கு தரும் நன்மைகளைத் தெரிவித்து, இதனை அணியக் கூடாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்