"இந்தியா 'டீம்'க்கு கெடச்ச 'சொத்து'ங்க அவரு..." 'இந்திய' வீரரின் 'பேட்டிங்' கண்டு சிலிர்த்து போன 'சுனில் கவாஸ்கர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்து அவுட்டானார்.
தான் களமிறங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அரை சதமடித்து பலரின் பாராட்டுக்களையும், கவனத்தையும் சுப்மன் கில் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய மைதானங்களில் வைத்து, ஆஸ்திரேலிய அணியின் மிகவும் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்ட சுப்மன் கில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், சுப்மன் கில்லை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அடித்து ஆடுவதை விட, பந்துகளை தடுத்து ஆடுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுவதை குறிப்பிட்டு பேசிய சுனில் கவாஸ்கர், அவர் இந்திய அணிக்கு கிடைத்த மதிப்புமிக்க வீரர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
'சுப்மன் கில் அரை சதமடித்த போது அவர் அதனை சதமாக மாற்றிக் காட்டுவார் என நான் எதிர்பார்த்தேன். அவர் அடித்த ஷாட்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. தொடக்க ஆட்டக்காரராக நம்பிக்கையளிக்கும் வகையில் அவர் ஆடியதைக் கண்ட போது அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது தெரிகிறது' என கவாஸ்கர் மேலும் புகழ்ந்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்