இந்தியா டீம்'ல இருக்குற பெரிய பிரச்சனை.. சுட்டிக் காட்டும் சுனில் கவாஸ்கர்.. இதுக்கு ஒரு முடிவு கண்டிப்பா வேணும் தம்பி

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய பிரச்சனை ஒன்றை, சுனில் கவாஸ்கர் சுட்டிக்  காட்டியுள்ளார்.

இந்தியா டீம்'ல இருக்குற பெரிய பிரச்சனை.. சுட்டிக் காட்டும் சுனில் கவாஸ்கர்.. இதுக்கு ஒரு முடிவு கண்டிப்பா வேணும் தம்பி

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும், இந்திய அணி தோல்வியையே தழுவியது.

மோசமான பந்து வீச்சு

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி, 200 ரன்களைக் கடந்த நிலையில், ஒரு விக்கெட்டை மட்டும் தான் இழந்துள்ளது. முன்னதாக, முதல் போட்டியில், ஆரம்பத்தில் விக்கெட்டுகளை சாய்த்த இந்திய அணி, அதன் பிறகு மிகவும் மோசமாக பந்து வீசியது.

sunil gavaskar points out india team biggest problem

வெங்கடேஷ் ஐயர்

இதனால், எதிரணியினர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும், தாங்கள் செய்த தவறால் வெற்றி வாய்ப்பினை இழந்தது. அது மட்டுமில்லாமல், கடந்த போட்டியில் ஆல் ரவுண்டராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், பேட்டிங்கிலும் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

sunil gavaskar points out india team biggest problem

சுனில் கவாஸ்கர் விளக்கம்

தற்போதைய உலக கிரிக்கெட் அணிகளில், சிறந்த அணி என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு முறை கூட ஐசிசி கோப்பை எதையும் வென்றதில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ஐசிசி தொடரில் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடைந்து வருவதற்கான காரணத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறந்த ஆல் ரவுண்டர்கள்

'ஐசிசி தொடர்களில், தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி ஏமாற்றம் அடைந்து வருவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், ஐம்பது ஓவர் உலக கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியை நீங்கள் எடுத்து பார்த்தால், அதில் இடம்பெற்றிருந்த பெரும்பாலானோர், சிறந்த ஆல் ரவுண்டர்கள் தான்.

sunil gavaskar points out india team biggest problem

ஒருத்தர் கூட இல்லை

பேட்டிங் செய்யக் கூடிய நிறைய பேர், சிறப்பாக பந்து வீசவும் செய்வார்கள். 6, 7 மற்றும் 8 ஆம் இடங்களில் ஆல் ரவுண்டர் வீரர்களும் இடம் பிடித்திருந்தார்கள். இந்திய அணியில் முன்பு ஆடிய சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பேட்டிங்குடன் சேர்த்து, அற்புதமாக பந்து வீசவும் செய்தார்கள். ஆனால், சமீப காலமாக இந்திய அணியில் அப்படி, ஒரு வீரர் கூட இல்லை.

நிதர்சனமான உண்மை

இந்த குறையின் காரணமாக, அணியின் கேப்டனுக்கு வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே போல, அணியிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வழி இல்லாமல் போகிறது' என சுனில் கவாஸ்கர், இந்திய அணியிடம் உள்ள ஆல் ரவுண்டர் குறையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

sunil gavaskar points out india team biggest problem

சுனில் கவாஸ்கர் தெரிவித்ததைப் போலவே, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல் உள்ளிட்ட வீரர்கள் யாரும் பந்து வீசுவது கிடையாது. ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் மட்டுமே அணியில் உள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

SUNIL GAVASKAR, VENKATESH IYER, ALL ROOUNDER, ICC, INDIAN CRICKET TEAM, BCCI

மற்ற செய்திகள்