"நான் மத்தவங்க மாதிரி எல்லாம் இல்லங்க.. ரொம்ப 'different'.. அதுலயும் அவரோட 'பேட்டிங்'னா ரசிச்சு பார்ப்பேன்.." 'ஜாலி'யாக மனம் திறந்த 'சுனில் கவாஸ்கர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒரு காலத்தில், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் இருந்த காலத்தில், கிரிக்கெட்டின் பரிணாமாக, டி 20 போட்டிகள் உருவானது.

"நான் மத்தவங்க மாதிரி எல்லாம் இல்லங்க.. ரொம்ப 'different'.. அதுலயும் அவரோட 'பேட்டிங்'னா ரசிச்சு பார்ப்பேன்.." 'ஜாலி'யாக மனம் திறந்த 'சுனில் கவாஸ்கர்'!!

மேலும், கடந்த 15 ஆண்டுகளாக டி 20 போட்டிகள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில், சுமார் 3 மணி நேரத்தில், ஒரு போட்டி முடிவடைந்து விடும் என்பதால், அந்த குறுகிய நேரத்தில் நிகழும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அது மட்டுமில்லாமல், டி 20 தொடரான ஐபிஎல் போட்டிகளுக்கும் இங்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதன் காரணமாக, பாரம்பரிய கிரிக்கெட் போட்டியான டெஸ்ட் போட்டிகளின் மதிப்பு, அழிந்து விட்டதாகவும் உணர்கிறார்கள்.

sunil gavaskar opens up about his love for t20 and his fav player

அதிலும் குறிப்பாக, பல முன்னாள் வீரர்கள், டி 20 போட்டிகளை அதிகம் ரசிப்பதுமில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரரான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), தான் டி 20 போட்டிகளை அதிகம் நேசிப்பதாக கூறியுள்ளார்.

sunil gavaskar opens up about his love for t20 and his fav player

'எனது காலத்தில் ஆடிய பல வீரர்களுக்கு, டி 20 போட்டிகள் பெரிதும் பிடிக்கவில்லை. ஆனால், எனக்கு இந்த டி 20 ஃபார்மட் மிகவும் பிடிக்கும். இதற்கு மிக முக்கிய காரணம், மூன்றே மணி நேரத்தில் முடிவடையும் என்பது தான். இதில், சிலர் சுவிட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய அற்புதமான ஷாட்களை பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போது, அதனைப் பார்க்க மிகவும் சிறப்பாக உள்ளது.

sunil gavaskar opens up about his love for t20 and his fav player

அந்த வகையில், தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், 360 டிகிரியிலும் ஷாட்களை அடித்து ஆடக் கூடியவர். அவரைப் போல ஆட வேண்டும் என்பது தான் எனது ஆசை. மிகவும் சாதாரணமாக அவர் பேட்டிங் செய்வார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை அவர் அடித்து ஆடுவார். அவர் பேட்டிங் செய்வதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்