"உம்ரான் மாலிக் Ball-அ இப்டி தான் Face பண்ணனும்.." சுனில் கவாஸ்கர் கொடுத்த 'செம' ஐடியா!!.. "எல்லாரும் இத Follow பண்ணுங்கபா.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது மும்பையை சுற்றியுள்ள மைதானங்களில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு போட்டியும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இருந்து வருகிறது.
ஜொலிக்கும் இளம் வீரர்கள்
தங்களின் பேவரைட் அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போட்டிகளை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். அதே போல, எல்லா ஐபிஎல் தொடர்களிலும் இளம் வீரர்கள் ஜொலித்து, பல கிரிக்கெட் பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.
அசுர வேகத்தில் உம்ரான் மாலிக்
அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பி வருகின்றனர். அப்படி ஒரு இளம் வீரர்களில், இந்த முறை மிக முக்கியமான வீரர்களாக கருதப்படுபவர் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் உம்ரான் மாலிக், அனைத்து போட்டிகளிலும் சுமார் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி வருகிறார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ஐந்து விக்கெட்டுகள் எடுத்திருந்த உம்ரான் மாலிக், அதில் 4 விக்கெட்டுகளை போல்டு மூலம் எடுத்திருந்தார். இந்திய அணியில் உம்ரானுக்கு இடம் கிடைக்க வேண்டும் என பல கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வரும் நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 154 கி.மீ வேகத்தில் இரண்டு பந்துகளை வீசி இருந்தார்.
சுனில் கவாஸ்கர் கொடுத்த ஐடியா..
தொடர்ந்து, தனது வேகத்தில் எந்தவித குறைவும் இல்லாமல் பந்து வீசி வரும் உம்ரான் மாலிக், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், உம்ரான் மாலிக் பந்தினை பேட்ஸ்மேன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி, கருத்து தெரிவித்துள்ளார்.
"உம்ரான் மாலிக் பந்தை சமாளிக்க வேண்டும் என்றால், சிங்கிள் எடுத்து விட்டு, நான் ஸ்ட்ரைக் பகுதிக்கு சென்று விட வேண்டும். அதே போல, உங்களின் ஸ்டம்ப், அவரது கண்ணில் படும் அளவுக்கு பேட்டிங் நிற்கக் கூடாது. அவர் பந்து வீச ஓடி வரும் போது, மூன்று ஸ்டம்ப்களையும் மறைத்த படி, நீங்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது, அவர் லெக் மற்றும் ஆப் ஸ்டம்ப்கள் எங்கே இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டே ஓடி வர வேண்டிய நிலை ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்