'எத்தனையோ பேட்ஸ்மேன பார்த்தாச்சு...' ஆனா 'யார்கிட்டையும்' இல்லாத ஒண்ணு 'இவருகிட்ட' இருக்கு...! - டெல்லி அணி வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று (02-05-2021) டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஐபில் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.

'எத்தனையோ பேட்ஸ்மேன பார்த்தாச்சு...' ஆனா 'யார்கிட்டையும்' இல்லாத ஒண்ணு 'இவருகிட்ட' இருக்கு...! - டெல்லி அணி வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்...!

அதோடு டெல்லி அணியின் வெற்றிக்கு ஷிகர் தவானின் அசத்தல் அரை சதம் முக்கிய காரணமாக அமைந்தது.

Sunil Gavaskar expresses his appreciation to Shikhar Dhawan

ஷிகர் தவான் குறித்து பேசிய கவாஸ்கரின் பேட்டி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஷிகர் தவான் அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவர் அந்த ஃபார்மை தொடர்ந்து எடுத்து செல்கிறார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், அந்த மிதப்பில், சில தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் ஷிகர் தவான் அப்படி ஏதுமே செய்யவில்லை. அதனால்தான் அவர் ஸ்பெஷல்' என மெட்சி கூறியுள்ளார்.

Sunil Gavaskar expresses his appreciation to Shikhar Dhawan

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் களமிறக்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா கூட்டணி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தனர்.

Sunil Gavaskar expresses his appreciation to Shikhar Dhawan

மேலும், பஞ்சாப் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

மற்ற செய்திகள்