"2 பந்து வீசுற வரை பொறுமையா இருக்க கூடாதா?".. சுப்மன் கில் செஞ்ச வேலை.. கடுகடுத்த கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த சுப்மன் கில்லின் செயலால் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.

"2 பந்து வீசுற வரை பொறுமையா இருக்க கூடாதா?".. சுப்மன் கில் செஞ்ச வேலை.. கடுகடுத்த கவாஸ்கர்..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | யப்பா நம்ம உமேஷ் யாதவா இது?.. அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்.. விராட் கோலி ரியாக்ஷனை பாருங்க 😅.. வீடியோ..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள சூழலில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. தொடர்ந்து ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி உள்ளார்.

Sunil Gavaskar disappointment after Gill call for physio in 3rd Test

Images are subject to © copyright to their respective owners.

நேற்றைய ஆட்டத்தின் போது, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நான் ஸ்ட்ரைக் எண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்டார்க் வீசிய 7 வது ஓவரை புஜாரா எதிர்கொண்டார். அந்த ஓவரின் 4 வது பந்தில் குயிக் சிங்கிள் எடுக்க கில் முயற்சித்தார். ஆனால், ரிஸ்க் என புஜாரா சைகை காட்ட, மீண்டும் கிரீசுக்குள் டைவ் அடித்து உள்ளே வந்தார். அப்போது அவருடைய அடிவயிற்றில் சிராய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ உதவியை கோரினார் கில்.

இந்த சூழ்நிலையில் வர்ணனை செய்துகொண்டிருந்த சுனில் கவாஸ்கர்,"கில்லுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்திருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசுகிறார். வானிலையும் வெப்பமாக இருக்கிறது. நீங்கள் பவுலருக்கு ஓய்வு கொடுக்கிறீர்கள். 4 பந்துகள் ஏற்கனவே வீசப்பட்ட நிலையில் இன்னும் 2 பந்துகள் காத்திருந்து, ஓவர் முடிவில் சிகிச்சை பெற்றிருக்கலாம். ஏனென்றால் நீங்கள் நான் ஸ்ட்ரைக் எண்டில் தான் நின்று கொண்டிருக்கிறீர்கள். சிறிய விஷயங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

Sunil Gavaskar disappointment after Gill call for physio in 3rd Test

Images are subject to © copyright to their respective owners.

அப்போது அருகில் இருந்த சக வர்ணனையாளரான மேத்தீவ் ஹைடன், "நீங்கள் மிகவும் கண்டிப்பான மனிதர்" என கவாஸ்கரிடம் சொன்னார். ஆனாலும், தன்னுடைய கருத்தில் இருந்து கவாஸ்கர் பின்வாங்கவில்லை.

Also Read | ஒரே நாளில் 3 நிறங்களுக்கு மாறும் சிவலிங்கம்?.. பல்லாண்டு பழமையான கோவிலில் தினந்தோறும் நடக்கும் அதிசயம்..?

CRICKET, SUNIL GAVASKAR, GILL, SHUBMAN GILL

மற்ற செய்திகள்