‘கண்ணை மூடி திறப்பதற்குள் கோடிஸ்வரர் ஆகிடுவாங்க’.. ஐபிஎல் ஏலத்தில் இந்த ரூல்ஸை கொண்டு வரணும்.. கவாஸ்கர் கொடுத்த புது ஐடியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பது குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவத்துள்ளார்.
கேப்டன்ஷி பத்தி மட்டும் பேசிட்டு.. இதை பாராட்ட மறந்திடுறீங்க.. தோனி குறித்து அஸ்வின்..!
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நாளை (12.02.2022) பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த முறை லக்னோ, அகமதாபாத் என்ற இரு புதிய அணிகள் இணைந்துள்ளதால், அனைத்து அணியில் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஏலத்தில் கலந்துகொள்ள தேர்வான 590 வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.
அதில் பல இளம் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துள், ராஜ் பாவ உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலரும் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்குபெறும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் சம்பளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில், நம் நாட்டை சேர்ந்த சில 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என நினைக்கிறேன். ஆனாலும் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் சிறந்து விளங்கியவர்கள் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் கூட இதில் சிறந்து விளங்கியதில்லை. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் தரம் என்பது மிகப் பெரியது.
சில வீரர்களுக்கு திடீரென அதிக பணம் கிடைப்பதால் கிரிக்கெட்டில் இருந்து அவர்களது கவனம் சிதறிவிடுகிறது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச தொகையை சம்பளமாக நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் அதிக பணத்திற்காக கடினமாக உழைக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஏனென்றால் பணம் எளிதாக கிடைத்து விட்டால் சில திறமைகள் இளமையிலேயே காணாமல் போய்விடும். இதற்கு முன் இதுபோன்ற எத்தனையோ வீரர்கள் பணத்தால் சிறப்பாக செயல்பட தவறி இறுதியில் காணாமல் போயுள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சம்பள அளவை நிர்ணயித்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியை அவர்களிடையே ஐபிஎல் நிர்வாகத்தினர் ஏற்படுத்த வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விடுஞ்சா ஐபிஎல் ஏலம்.. திடீர்னு விலகிய பஞ்சாப் அணியின் முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மற்ற செய்திகள்