"அடுத்த ஐபிஎல் 'சீசன்'ல 'தோனி' ஆடுறதுக்கு முன்னாடி... கண்டிப்பா இத பண்ணியே ஆகணும்..." அறிவுரை சொன்ன 'கவாஸ்கர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.
கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சென்னை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்தது. இந்நிலையில் இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் சீனியர் வீரர்களில் டு பிளஸ்ஸி தவிர மற்ற யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிவுப்படுத்தவில்லை.
அதிலும் குறிப்பாக சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது. ஒரு அரைசதம் கூட இந்த சீசனில் அவர் அடிக்கவில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு முடிவை அறிவித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங்கை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், 'தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் தோனி ஆட வேண்டும். வலைப் பயிற்சி மட்டுமே மேற்கொண்டு வருவதால் எந்த பயனும் இல்லை. போட்டிகளில் பங்கேற்றால் மட்டும் தான் திறமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்' என அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்கக்கராவும் தோனி உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்